உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அரசு மருத்துவக்கல்லுாரி கட்டட பூச்சுகளில் சேதம், சுவர்களில் விரிசல் மாணவர்கள் அச்சம்

அரசு மருத்துவக்கல்லுாரி கட்டட பூச்சுகளில் சேதம், சுவர்களில் விரிசல் மாணவர்கள் அச்சம்

விருதுநகர் : விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி கட்டடத்தில் பூச்சுகள் பெயர்ந்தும், சுவர்களில் விரிசல் விழுந்து உள்ளது. இதன் தரத்தை ஆய்வு செய்து மாணவர்களின் அச்சத்தை போக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.விருதுநகரில் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை 2022 ஜன 12 ல் புதிதாக திறக்கப்பட்டது. இந்த மருத்துவக்கல்லுாரியில் தற்போது 450 மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர். மாணவர்களின் வகுப்பறை சுவர்களில் பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளது. இதன் உட்புறம், வெளிபுறம் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு கட்டடம் சேதமாகி வருகிறது. வெளிப்புறத்தில் உள்ள கட்டட சுவர்களில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டதால் விரிசல் தெரியாமல் உள்ளது.இந்த கட்டடம் கட்டி திறக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளிலேயே விரிசல் ஏற்பட்டுள்ளது மாணவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கு ஐந்து, ஆறாம் தளங்களில் உள்ள சுவர்களில் துருப்பிடித்தது போல காணப்படுகிறது. மருத்துவக்கல்லுாரி கட்டுமானம் முடிந்த பின்பு முறையாக ஆய்வு செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் மருத்துவக்கல்லுாரிக்கு தேவையான தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் தனியார் லாரியில் கொண்டுவரப்படும் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரியில் சேதமானவற்றை சீரமைத்து மாணவர்கள் அச்சமின்றி பயிலவும், கல்லுாரிக்கு தேவையான தண்ணீரை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை