உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நிவாரண பொருட்கள் வழங்கல்

நிவாரண பொருட்கள் வழங்கல்

ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தின் சார்பில் கேரளா மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்கொண்டு செல்லப்பட்டது. மேலும் ரூ.1 லட்சம் கேரளா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், இணை வேந்தர்அறிவழகி, துணை தலைவர் சசிஆனந்த், துணை வேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் குழுவினர் இதற்கான வேனை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் பிரதேஷ், தினேஷ் குமார் மற்றும் மாணவர்கள் குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி