மேலும் செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் ரயில்கள் நிற்கும்
1 hour(s) ago
கோடவுனில் தீ விபத்து
1 hour(s) ago
ஊருணி தடுப்புச்சுவர் சேதம்: மாணவர்கள் அச்சம்
1 hour(s) ago
பெரிய கண்மாய் கரையை பலப்படுத்த எதிர்பார்ப்பு
1 hour(s) ago
விருதுநகர் : பணியாற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டுப்பதிவு செய்ய உதவும் தேர்தல் பணி சான்றை விடுபடாமல் வழங்ககோரிஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.மாவட்ட செயலாளர் செல்வகணேசன், மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலனிடம் அளித்த மனு: தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் வாக்காளர்கள் என்பதை கருத்தில் கொண்டு அவர்கள் நுாறு சதவீதம் தங்களது ஓட்டு பதிவு செய்வதை உறுதி செய்ய, அவர்கள் பணியாற்றும் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டுச்சாவடியிலேயே ஓட்டு போட உதவும்தேர்தல் பணி சான்றை விடுபடாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.வேறு லோக்சபா தொகுதியில் தேர்தல் பணி இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு விரைந்து தபால் ஓட்டுப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஓட்டுச்சாவடியில் அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, மின் வசதி, காற்றோட்ட வசதி உள்ளிட்ட வசதிகளை உறுதி செய்ய வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும்.தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் தேர்தல் பணிக்கு செல்வதற்கும், பணி முடிந்து மீண்டும் தங்கள் ஊருக்கு செல்வதற்கும் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தேர்தல் பயிற்சிக்கு எவ்வித உத்தரவுகளும் வராத நிலையில் தேர்தல் வகுப்பிற்கு ஏன் வரவில்லை என்று கோரி விளக்கம் கேட்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் அதற்கான விளக்கத்தை முதன்மை கல்வி அலுவலருக்கு நேரில் சென்று அளிக்க வேண்டும் என்று ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை வற்புறுத்தி வருகிறது. இதை உடனடியாக கைவிட வேண்டும், என கேட்டுள்ளார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago