உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் அலைக்கழிப்புக்கு கிடைத்த தீர்வு

மாற்றுத்திறனாளி அலுவலர் நியமனம் அலைக்கழிப்புக்கு கிடைத்த தீர்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலஅலுவலர் பணியிடத்தில் தாசில்தார் நிலையில் பணிபுரிந்து வரும் சீனிவாசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்பணியிடம் காலியாக இருந்தது. துாத்துக்குடி, தேனி மாவட்ட அலுவலர்கள் கூடுதல் பொறுப்பு பார்த்து வந்தனர். இருப்பினும் பேரிடர் தாசில்தார் சீனிவாசன் மேற்பார்வை பணிகளை செய்து வந்தார். இந்நிலையில் அவரையே அலுவலராக மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது. இந்நிலையில் நேற்று புதன் கிழமை நடந்த மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாமில் டாக்டர்கள் பரிசோதனை செய்த பின் உடனுக்குடன் அட்டை வழங்க கையெழுத்திடப்பட்டது. முன்பு ஒரு வாரம் கழித்து மீண்டும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு வரவேண்டும்என அலைக்கழிக்கப்பட்டநிலையில் தற்போது விரைவில் தீர்வு கிடைப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை முன்னுதாரணமாக கொண்டு பிற மாவட்டங்களிலும் தாசில்தார்களை மாற்றுத்திறனாளி அலுவலர்களாக நியமனம் செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை