உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 

ரோட்டில் விழும் நிலையில் பட்ட மரம் விபத்துக்கு முன் அகற்ற எதிர்பார்ப்பு 

விருதுநகர்: விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சி ரோட்டில் பட்ட மரம் ஒன்று உள்ளது. இதை விபத்துக்கு முன் அகற்றிவிட்டு அப்பகுதியில் ரோட்டோர மரங்களை நட வேண்டும்.விருதுநகர் வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் பட்ட மரம் உள்ளது.விருதுநகர் வடமலைக்குறிச்சி செல்லும் ரோட்டில் பட்ட மரம் உள்ளது. இதன் அருகே மரங்கள் இருந்தாலும் அடுத்தடுத்த தொலைவுகளில் ரோட்டோரம் மரம் இல்லை. ரோட்டோரம் மரம் வளர்க்க அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் அதை மாவட்ட நிர்வாகம் எந்த வகையில் செயல்படுத்தி வருகிறது என்பது கேள்விக்குறி.இந்நிலையில் முன்பு நடப்பட்ட பல மரங்கள் பட்டு வருகின்றன. அவற்றை முறைப்படி அகற்றவில்லை என்றால் தானாக விழுந்து விபத்து அபாயத்தை ஏற்படுத்தும். இதை உணர்ந்து அகற்ற வேண்டும். அதே போல் அகற்றிய இடத்தில் மரங்களை நட வேண்டும். தற்போது சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு 10 லட்சம் மரம் இலக்காக வைத்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.பட்ட மரங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் நல்ல மரங்களை வைப்பது தான் நல்ல முயற்சியாக இருக்கும். எதிர்காலத்தில் வாகனங்களால் காற்றில் அதிகரிக்கும் கார்பன் அளவையும் கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை