உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்

சொக்கர் கோயிலில் திருக்கல்யாணம்

ராஜபாளையம்: ராஜபாளையம் சொக்கர் கோயிலில்மாசி மகம் பிரம்மோற்ஸவத்தில் மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணம் நடந்தது.முன்னதாக பத்து நாள் திருவிழா மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் காட்சியளித்தார். ஏழாம் நாளான நேற்று மீனாட்சி சொக்கர் திருக்கல்யாணம் நடந்தது. சுவாமியும் அம்மனும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.திருக்கல்யாணம் முடிந்தவுடன் திருமணம் ஆன பெண்கள் புதிய தாலிக்கயிற்றை அணிந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. திரளானோர் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை