உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வாகன ஆக்கிரமிப்பால் 10 அடி ரோடு போச்சு --வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அவலம்

வாகன ஆக்கிரமிப்பால் 10 அடி ரோடு போச்சு --வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அவலம்

ராஜபாளையம்: ராஜபாளையம் பிரதான சாலையில் வழக்கில் சிக்கிய வாகனங்கள் ஆக்கிரமிப்பால் புதிய ரோடு பணிகளில் 10 அடி அகலத்திற்கு விடுபட்டுள்ளது குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.ராஜபாளையம் மாடசாமி கோவில் தெருவில் இருந்து திரவுபதி அம்மன் கோவில் தெரு வழியாக மதுரை மெயின் ரோட்டிற்கு பிரதான பாதை உண்டு. இதன் இடையே அமைந்துள்ள வடக்கு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கில் சிக்கியுள்ள டிராக்டர்கள், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் போலீஸ் ஸ்டேஷன் காம்பவுண்டுக்கு வெளியே நிறுத்தி வைத்துள்ளனர்.இந்நிலையில் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து புதிய தார் ரோடு பணிகள் நடந்து முடிந்துள்ளது. வாகனங்களை அகற்றாமல் 10 அடி விட்டு பணிகளை முடித்துள்ளனர்.இது குறித்து சங்கர் கூறியதாவது; வழக்குகளில் சிக்கிய வாகனங்களால் ஏற்கனவே இடையூறு ஏற்படுவது உடன் ரோட்டின் அகலம் சுருங்கிவிட்டது. ரோடு பணிகளின் போதாவது இவற்றை அகற்றி முழுவதும் போட்டிருந்தால் சிக்கல் இல்லை.அதற்கு பதில் 10 அடிக்கும் அதிகமாக இடத்தை விட்டு ரோடு போட்டுள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படும். முழுமையான அளவு ரோடு பணிகள் நடைபெற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை