100 நாள் வேலை கேட்டு முற்றுகை
அருப்புக்கோட்டை, செப்.24- அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை கேட்டு பெண்கள் முற்றுகையிட்டனர். அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது பெரியதும்மகுண்டு ஊராட்சி. இதில் சின்னதும்மகுண்டு, ஆண்டிபட்டி, பெரியதும்மகுண்டு கிராமங்கள் உள்ளன. இதில், மத்திய அரசின் 100 நாள் வேலை திட்ட பணிகள் நடந்து வருகிறது. பணிகளில் பாரபட்சம் காட்டுவதாகவும், ஆண்டிபட்டி மக்களுக்கு வேலை தர மறுப்பதாகவும் கூறி அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை ஆண்டிபட்டி மக்கள் முற்றுகையிட்டு, மேலாளர் செந்தில்ராணியிடம் மனு கொடுத்தனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில், கலைந்து சென்றனர். ----