சதுரகிரிக்கு 110 சிறப்பு பஸ்கள் இயக்கம்
விருதுநகர்:ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வெளியூர் பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய வருகின்றனர். அவர்கள் வசதிக்காக மதுரை மாட்டுத்தாவணி, திருமங்கலம், பேரையூர், டி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து 40 சிறப்பு அரசு பஸ்கள், விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்துார், வத்திராயிருப்பு, கோவில்பட்டி பகுதிகளில் இருந்து 70 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 110 சிறப்பு அரசு பஸ்கள் சதுரகிரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் நேற்று மாலை வரை 210 ட்ரிப்கள் இயக்கப்பட்டு, 16 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இன்று மதியம் வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என விருதுநகர் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.