உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 147; புகைச்சான்று இல்லாமல் இயக்கியது 298

அதிக பாரம் ஏற்றிய வாகனங்கள் 147; புகைச்சான்று இல்லாமல் இயக்கியது 298

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் ஓராண்டில் 2058 வாகனங்களுக்கு தணிக்கை வழங்கப்பட்டு அதில் 250 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. இதில் அதிக பாரம் ஏற்றிய147, புகை சான்று இல்லாமல் இயக்கிய 258 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. 2024 ஏப். 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான ஓராண்டு காலத்தில் மட்டும் வட்டார போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் தலைமையில் மோட்டார் ஆய்வாளர்கள் செல்வராஜ், கண்ணன் ஆகியோர் நடத்திய சோதனையில் 20 ஆயிரத்து 373 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. இதில் 2058 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. 250 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு பறிமுதலாகி உள்ளது. சாலை வரியாக ரூ.15 லட்சத்து 44 ஆயிரத்து 110 வசூல் செய்யப்பட்டது. சரக்கு வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிய 147 வாகனங்கள், ஆட்களை ஏற்றியதற்காக 196, தகுதிச்சான்று இல்லாமல் இயக்கியது 113, ஹெல்மெட் அணியாமல் இயக்கியது 304, சீட் பெல்ட் அணியாமல் இயக்கியது 284, புகைச்சான்று இல்லாமல் இயக்கியது 298, வரி இல்லாமல் இயக்கியது 41, அதிக வேகத்தில் வாகனத்தை இயக்கியது 98 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓராண்டில் அபராத தொகை ரூ.68 லட்சத்து 10 ஆயிரத்து 435 விதிக்கப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மாணிக்கம் கூறுகையில், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து அதிகம் பாரம் ஏற்றாது இயக்க வேண்டும். தகுதி சான்று, புகை சான்று போன்ற அவசியமான சான்றுகளை வைத்திருக்க வேண்டும். சாலை வரி செலுத்த தவறியோர் விரைந்து செலுத்த முன்வர வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை