மேலும் செய்திகள்
குரூப் 2 தேர்வர்களுக்கு கலெக்டர் அறிவுரை
26-Sep-2025
விருதுநகர்: விருதுநகரில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு 19 ஆயிரத்து 083 பேர் எழுத உள்ளனர். மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் வட்டங்களில் 63 தேர்வு மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ தேர்வுகள் நாளை (செப். 28) காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை நடக்கிறது. இதில் 19,083 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். விண்ணப்பத்தாரர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு கூடத்திற்கு ஹால்டிக்கெட் உடன் வர வேண்டும். காலை 9:00 மணிக்கு மேல் தேர்வு கூடத்திற்கு வருகை தரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார். தங்களுடைய புகைப்பட அடையாள அட்டைகளான ஆதார் அட்டை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், பான் வாக்காளர் அடையாள அட்டையின் அசல் அல்லது நகலை கொண்டு வர வேண்டும். தேர்வர்கள் கருப்பு நிற பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும். அலைபேசி, ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் எடுத்து செல்ல அனுமதி இல்லை. தேர்வர்கள் எளிய அனலாக் கைக்கடிகாரங்களை பயன்படுத்தலாம். போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறப்பு பஸ் வசதிகள் காலை 6:00 மணி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
26-Sep-2025