உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பைக், மோதிரம் திருட்டு சிறுவன் உட்பட 3 பேர் கைது

பைக், மோதிரம் திருட்டு சிறுவன் உட்பட 3 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பெருமாள் பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் காளிசெல்வம் 32, இவர் மே 11ல் தனது வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். இதனை நள்ளிரவில் மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றப்பிரிவு போலீசார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் 21, சங்கூரணி தெருவை சேர்ந்த செல்வகுமார் 25, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் கீழப்பட்டி தெருவை சேர்ந்த ராஜாமணி 85, என்பவரது வீட்டில் 4 பவுன் தங்க மோதிரத்தை திருடியது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்த பைக், மோதிரத்தை போலீசார் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ