உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கோயிலில் திருட முயற்சி 3 பேர் போலீசில் ஒப்படைப்பு

கோயிலில் திருட முயற்சி 3 பேர் போலீசில் ஒப்படைப்பு

நரிக்குடி: நரிக்குடி பகுதியில் பல்வேறு கோயில்களில் திருட முயற்சி செய்த மூவரை மக்கள் விரட்டி பிடித்து வீரசோழன் போலீசில் ஒப்படைத்தனர். நரிக்குடி ஒட்டங்குளம் வீராயி அம்மன் கோயிலில், நள்ளிரவில் பூட்டை உடைத்து கோயிலில் இருந்த உண்டியலில் பணத்தை திருட முயற்சி செய்தனர். இதனை அறிந்த கிராமத்தினர் திரண்டு வந்து மூவரையும் கையும் களவுமாக பிடித்து வீரசோழன் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் கமுதி பாப்பனத்தைச் சேர்ந்த பரணபாஸ் 19, திருச்சுழி குருந்தகுளம் சக்தியராஜ் 21, குழலிகுளம் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் என தெரியவந்தது. மூவர் மீதும் வழக்கு பதிவு செய்த வீரசோழன் போலீசார் இருவரை கைது செய்து, மைனரான 17 வயது சிறுவனை ஜாமினில் அனுப்பினர். இது அக்கிராமத்தினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் முத்தனேரி கோயில் உண்டியலில் இருந்த ரூ. 12 ஆயிரம் திருடு போனது. அதே போல் நரிக்குடி, மாயலேரி பகுதிகளில் உள்ள கோயில்களில் திருட முயற்சி செய்துள்ளனர். நரிக்குடி பகுதியில் டூவீலர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போலீசார் சென்று கண்காணித்து திருட்டு சம்பவத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ