உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மம்சாபுரத்தில் 35 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

மம்சாபுரத்தில் 35 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மம்சாபுரம் காந்தி நகரில் நேற்று முன்தினம் இரவு தெருவில் 1400 கிலோ ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, அதனை 35 மூடைகளில் வைத்திருப்பதை அறிந்த போலீசார் அவற்றை கைப்பற்றினர். மேலும் அதனை வாங்கி செல்ல வந்திருந்த தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சுடலைமணி 38, என்பவரை போலீசார் பிடித்து விருதுநகர் உணவுப் பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் உதயகுமார் அவரை கைது செய்து விசாரிக்கின்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !