உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மது குடித்தவரை தாக்கி நகைகள் திருட்டு: 4 பேர் கைது

மது குடித்தவரை தாக்கி நகைகள் திருட்டு: 4 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி இந்திரா நகரை சேர்ந்தவர் முனியசாமி 41. இவர் அக்.6ம் தேதி தனது தெருவில் வசிக்கும் கனகராஜ் 35, என்பவருடன் பூவநாதபுரம் டாஸ்மாக் கடை பின்புறம் மது குடித்துள்ளார். அப்போது அங்கு வந்த கனகராஜின் நண்பர்கள் சிவகாசியை சேர்ந்த ரஞ்சித் 31, சரவணன் 30, தவராஜா 24, ஆகியோர் முனியசாமியை தாக்கி, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயின், மோதிரத்தை பறித்துள்ளனர். மேலும் அவரிடம் இருந்த வீட்டுச் சாவியை பறித்து கொண்டு வீட்டிற்கு சென்று பீரோவை உடைத்து அதிலிருந்த 38 கிராம் தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ. 40 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளை அடித்து விட்டு டூவீலரில் தப்பினர். மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வத்திராயிருப்பு இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையில் சிறப்பு தனிப்படையினர் கொடைக்கானலில் பதுங்கி இருந்த நான்கு பேரையும் கைது செய்து நகை, வெள்ளி பொருட்கள், பணத்தை மீட்டனர். அவர்களது டூவீலர்களை பறிமுதல் செய்தனர். குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு எஸ்.பி. கண்ணன், டி.எஸ்.பி. ராஜா பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி