உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு திருத்தங்கலில் 4 பேர் கைது

வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீச்சு திருத்தங்கலில் 4 பேர் கைது

சிவகாசி,:விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கலில் முன் விரோதத்தில் வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருத்தங்கல் ஆலமரத்துப்பட்டி ரோடு பசும்பொன் நகரை சேர்ந்தவர்கள் விஜய பாண்டியன் 32. தமிழரசன் 28. இவர்களுக்குள் முன் விரோதம் இருந்தது. மூன்று நாட்களுக்கு முன் இரு தரப்பை சேர்ந்தவர்களும் மோதிக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து போலீசார் விஜயபாண்டியனையும், தமிழரசனையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணியளவில் விஜய பாண்டியன் தரப்பைச் சேர்ந்த பொன்மணி, தினேஷ், சூர்யா, கணேசன் ஆகியோர் பயமுறுத்துவதற்காக பெட்ரோல் குண்டை தமிழரசன் வீட்டின் முன் எறிந்தனர். அது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்த காட்சி அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்த 4 பேரையும் சிவகாசி போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ