திருச்சுழியில் கூரை இடிந்து சிறுவர்கள் உட்பட 4 பேர் காயம்
திருச்சுழி; திருச்சுழி அருகே சவ்வாஸ்புரம் அருந்ததியினர் குடியிருப்பில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் சிறுவர்கள் உட்பட நான்கு பேர் காயம் அடைந்தனர்.இங்குள்ள வீட்டில் வீராச்சாமி, 34, தனது குடும்பத்துடன் நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தனர். ஏற்கனவே சேதம் அடைந்த கூரை திடீரென்று தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் வீராசாமி, மனைவி பாக்கியலட்சுமி31, இவர்களது மகள் கிருத்திகாதேவி 7, மகன் நவீன்குமார் 5, காயமடைந்தனர். இவர்கள் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அமைச்சர் தங்கம் தென்னரசு மருத்துவமனைக்கு நேரடியாக சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.