சத்துணவு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு 585 பேர் ஆப்சென்ட்
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தேர்தல் வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750, சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடந்தது. மாவட்டம் முழுவதிலும் அனைத்து ஒன்றியங்களை சேர்ந்த 585 பேர் பங்கேற்றனர். மாவட்ட செயலாளர் சுதந்திர கிளாரா தலைமை வகித்தார்.