மேலும் செய்திகள்
பர்கூர் காளை மாடு 38 ஆயிரம் ரூபாய்
02-Dec-2024
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கலப்பு திருமண தங்கம் வழங்கும் திட்டத்தில் 671 பேர் பயனடைந்துள்ளனர்.கலப்புத் திருமண உதவி திட்டத்தின் கீழ் மணமகள்10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் நிதியுதவியில்,ரூ.15 ஆயிரம் மின்னணு மூலமாகவும், ரூ10 ஆயிரம் தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.50,000, அதில் ரூ.30 ஆயிரம் மின்னணு மூலமாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. இவ்வாறு கலப்புத் திருமண திட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் இந்தாண்டு இதுவரை 892 பேர் விண்ணப்பித்ததில் 671பேருக்கு உதவித்தொகை, தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டுள்ளது. 221 பேருக்கு நிலுவை உள்ளது என சமூகநலத்துறையினர் தெரிவித்தனர்.
02-Dec-2024