மேலும் செய்திகள்
நடமாடும் வாகனத்தில்மாநகரில் வரி வசூல்
19-Feb-2025
ராஜபாளையம் : ராஜபாளையம் நகராட்சியில் தற்போது வரை 70 சதவீத வரி வசூல் முடிந்துள்ள நிலையில் 15வது நிதிக் குழு மானியம் பெற இறுதி வசூல் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.ராஜபாளையம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. 55 ஆயிரம் குடியிருப்புகள் மூலம் ஆண்டுக்கு சொத்து வரி, குடிநீர் கட்டணம், குப்பை வரி, பாதாள சாக்கடை வரி என இந்த ஆண்டு இலக்கானரூ.19 கோடி வசூலிக்கப்பட வேண்டும்.நடப்பு ஆண்டு வரியுடன் நிலுவையில் உள்ள வரியை வசூலிக்கும் பணியில் நகராட்சி வருவாய் பிரிவினர், சுகாதார பிரிவு அலுவலர்கள் குழுவாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய நிலையில் 70 சதவீதம் வசூல் ஆகி உள்ளது. இன்னும் பத்து நாட்களே உள்ளதால் நகராட்சியின் அனைத்து துறையினரும் வரி வசூலில் கவனம் செலுத்தி இந்த ஆண்டு இலக்கினை அடைய முனைப்பு காட்டி வருகின்றனர். நாகராஜன், நகராட்சி கமிஷனர்: கடந்த ஆண்டின் ரூ. 17 கோடி வசூல் தொகையை விட சொத்து வரி 10.15 சதவீதம் அதிகமாக வரி வசூல் செய்து இலக்கை எட்டினால் மத்திய அரசின் 15வது நிதிக்குழு மானியம் பெற முடியும். தற்போது வரை 70 சதவீதம் வசூல் ஆகியுள்ளது. 100 சதவீதம் வரி வசூல் என்ற இலக்கை எட்ட குறைந்த நாட்களே உள்ளதால் முழு கவனம் செலுத்தி உள்ளோம்.
19-Feb-2025