250 குழந்தைகளுக்கு மோதிரம்
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 'தாய்மாமன் தங்க மோதிரம்' வழங்கும் திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை அணிவித்தார். முதல் நாளான இன்று 250 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷரண்யாஅறி, விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.