உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / குடிமகன்களின் பார் ஆக மாறிய கதிரடிக்கும் களம்

குடிமகன்களின் பார் ஆக மாறிய கதிரடிக்கும் களம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே கதிர் அடிக்கும் களத்தை திறந்த வெளி 'பாராக' குடிமகன்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கஞ்சநாயக்கன்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை மூலம் தும்பை குளம் கண்மாய் அருகில் கதிரடிக்கும் களம் 8.80 லட்சம் ரூபாய் நிதியில் பல மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இது விவசாயிகள் தங்கள் பயிர்களை கதிர் அடிக்க பயன்படுத்துவர். ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தின் களம் அமைந்துள்ளதால், விவசாயிகள் களத்தை பயன்படுத்தும் முன்பே, குடி மகன்கள் மாலை நேரங்களில் திறந்த வெளி பாராக களத்தை பயன்படுத்தி வருகின்றனர். நன்கு குடித்துவிட்டு மது பாட்டில்களை உடைத்து களத்திலேயே போட்டுள்ளனர். முழுவதும் பாட்டில் துண்டுகள் இறைந்து கிடக்கிறது. அத்துடன் வாட்டர் பாக்கெட், பிளாஸ்டிக் கப்புகள், ஊறுகாய் பொட்டலங்கள் என சிதறி கிடக்கின்றன. இதனால் பல லட்சம் நிதி செலவழித்தும் கதிர் அடிக்கும் களத்தை விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. லட்சக்கணக்கான அரசு நிதியும் வீணானது. ஊராட்சி நிர்வாகம், போலீஸ், நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை