உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 2 குடும்பம் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம்

2 குடும்பம் மட்டுமே வசிக்கும் ஒரு கிராமம்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டம், மன்னார்கோட்டை ஊராட்சி குமாரபுரம் கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால், பெரும்பாலானோர் நகரத்திற்கு இடம்பெயர்ந்த நிலையில், இரு குடும்பங்கள் மட்டுமே தற்போது வசிக்கின்றனர். விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், மன்னார்கோட்டை ஊராட்சியின் உட்கடையாக குமாரபுரம் கிராமத்தில், 15 ஆண்டுகளாக அடிப்படை வசதி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இங்கிருந்து மக்கள் வெளியேற துவங்கினர். இங்கு தற்போது பாண்டுரங்கன், ஆனந்தராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் எட்டு பேர் மட்டுமே வசிக்கின்றனர். தெருவிளக்குகள் இல்லாத ஒன்றரை கி.மீ., சாலையை கடந்து தான் இரவில் கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இங்கு வழங்கப்படும் தாமிரபரணி குடிநீரும் லேசான மஞ்சள் நிறத்தில் உள்ளது. இதனால் குடும்பங்கள் வெளியேறுவது தவிர்க்க முடியாததாக மாறி வருகிறது. இவர்களும் வெளியேறிவிட்டால் இந்த ஊர் காலியாகி விடும். அதற்கு முன் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர அதிகாரிகள் முன் வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
செப் 06, 2025 10:09

பஞ்சப்பூர், கிளாம்பாக்கம் மாதிரி அடுத்த விருதுநகர் மெயின் பஸ்ஸ்டாண்ட் அங்கே கட்டப் போறோம்னு சொல்லி முன்னேத்திருவாங்களே...