மேலும் செய்திகள்
பரமக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை
06-Mar-2025
மூதாட்டி வீட்டில் 5 அரை பவுன் மாயம்
14-Mar-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் ஏ.சி., மெக்கானிக் பலியானார்.அருப்புக்கோட்டையை புளியம்பட்டியை சேர்ந்த ஏ.சி., மெக்கானிக் பிரபு 43. இவர் அருப்புக்கோட்டையிலும், வாரம் ஒரு முறை பரமக்குடிக்கு சென்று அங்கு பணி செய்து வந்தார். நேற்று காலை 8:00 மணிக்கு பரமக்குடிக்கு சென்று பணியை முடித்துவிட்டு தனது பைக்கில் அருப்புக்கோட்டை வந்து கொண்டிருந்தார். தமிழ்பாடி அருகே வந்தபோது அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி நோக்கி சென்ற லாரி, பைக் மீது மோதியதில் பிரபு சம்பவ இடத்தில் பலியானார். லாரி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. திருச்சுழி போலீசார் விசாரிக்கின்றனர்.
06-Mar-2025
14-Mar-2025