உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்

நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் மேயும் கால்நடைகளால் விபத்து அபாயம்

விருதுநகர்: விருதுநகர் -- சாத்துார் நான்கு வழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் கால்நடைகளின் மேய்ச்சல் தொடர்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் வழியாக செல்லும் இந்த நான்கு வழிச்சாலையில் தினசரி விபத்து ஏற்பட்டு காயம், உயிரிழப்பு தொடர்கிறது. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளதால் புற்கள் வளர்ந்து மேய்ச்சலுக்கு உகந்த சூழ்நிலை உண்டாகியுள்ளது. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் தற்போது மேய்ச்சலுக்காக நான்கு வழிச்சாலை அருகே உள்ள காலி நிலங்களுக்கு கால்நடைகளை அழைத்து வருகின்றனர். இப்படி வரும் கால்நடைகள் நான்கு வழிச்சாலையில் உள்ள சென்டர் மீடியனில் வளர்ந்த புற்களை உணவாக உட்கொள்கின்றன.மேலும் ரோட்டை கடப்பதற்காக செல்லும் போது அவ்வழியாக செல்லும் லாரி, கார், டூவீலர் மீது மோதி விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது போன்ற விபத்துக்களால் வாகனங்கள் சேதமாகி, கால்நடைகள் காயமடைவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் உரிமையாளர்கள் நிழலில் நின்று கொண்டு கால்நடைகளை மேய்ப்பதால் அனேக விபத்துக்கள் ஏற்படுகிறது.எனவே கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு வருபவர்கள் நான்கு வழிச்சாலையின் சென்டர் மீடியனில் மேய்ப்பதால் ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !