பட்டாசு, வெடி பொருட்கள் பதுக்கினால் நடவடிக்கை
விருதுநகர், : விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் டிரான்ஸ்போர்ட் நிறுவனங்கள், பிற வகை கோடாவுன்களில் சட்ட விரோதமாக பட்டாசு, வெடிபொருட்களை வெளியூர்களுக்கு கொண்டுச் செல்வதற்காக பதுக்கி வைக்கக்கூடாது.இவற்றை போலீசார், உள்ளாட்சி, வருவாய், வட்டார போக்குவரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். பதுக்கி, வெளியூருக்கு எடுத்துச் செல்பவர்கள் மீது பாரதீய நாகரீக் சுரக்ஷா சந்நிகா - 152 படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.