மேலும் செய்திகள்
ஏரியில் குழந்தைகளுடன் குதித்து தாய் தற்கொலை
07-Jun-2025
அருப்புக்கோட்டை:குடும்ப பிரச்னையால், மனைவி, இரு மகள்களை அரிவாளால் வெட்டியும், அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்த கோபக்கார விவசாயி போலீசில் சரணடைந்தார்.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே திருவிருந்தாள்புரத்தைச் சேர்ந்தவர் சுந்தரவேலு, 45. இவரது மனைவி பூங்கொடி, 35. தம்பதியின் மகள்கள் ஜெயதுர்கா, 10, ஜெயலட்சுமி, 7. இருவரும் முறையே 5, 2ம் வகுப்பு படித்தனர். சுந்தரவேலு, 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். ஆறு மாதங்களாக தோட்டத்தில் விவசாயம் செய்து வருகிறார். வீட்டில் கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்னை இருந்து வந்தது. இதில், மனைவி கோபித்துக் கொண்டு தன் ஊரான நந்திகுண்டுவிற்கு சென்று விடுவது வழக்கம்.நேற்று காலை 6:00 மணிக்கு வீட்டில் தம்பதியிடையே சண்டை நடந்துள்ளது. அதன் பின், சுந்தரவேலு, மனைவி, மகள்கள் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும், அம்மிக்கல்லை போட்டும் கொலை செய்துவிட்டு, அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார். தகவலறிந்து அதிர்ச்சியான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மூவரின் உடல்களையும் கைப்பற்றினர். கொலை நடந்த இடத்தில் எஸ்.பி., கண்ணன், ஏ.எஸ்.பி., மதிவாணன் நேரடியாக விசாரித்தனர்.சுந்தரவேலுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், 'என் மனைவி மீது எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அவர் தங்கம் போன்றவர். எனக்கு அடிக்கடி கோபம் வரும். நான் சொன்ன வேலையை உடனே செய்யவில்லை என்றால் மனைவியுடன் சண்டை போடுவேன். 'அவ்வாறு நேற்று முன்தினம் இரவு சண்டை நடந்தது. இதனால் நேற்று காலை விவசாய பணிக்கு செல்லாமல் மனைவியை கொலை செய்தேன். தான் சிறைக்கு சென்று விட்டால் குழந்தைகள் அனாதையாகி விடுவர் என, துாங்கிக்கொண்டிருந்த அவர்களையும் கொலை செய்தேன்' என, கூறியுள்ளார்.மூவர் கொலை, கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
07-Jun-2025