உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம்

விருதுநகர்,: விருதுநகர் மாவட்ட சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக வழிபாடு நடந்ததுவிருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் அன்னம், காய்கறி, பழங்களால் மூலவர் சொக்கநாதருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன. அலங்காரம் கலைக்கப்பட்டு அபிஷேக பூஜைக்கு பின் பக்தர்களுக்கு அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் காட்சி தந்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.*அருப்புக்கோட்டையில் சிவன் கோயில்களில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது.ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் சிவலிங்கத்தை முழுவதுமாக அன்னத்தினால் மூடி அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கும். அதன் படி நேற்று அருப்புக்கோட்டை அமுதலிங்கேஸ்வரர் கோயில், சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், திருச்சுழி திருமேனிநாதர் உட்பட கோயில்களில் அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.*ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் 10:30 மணி வரை, கும்பம் வைத்து சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவருக்கு 200 கிலோ அரிசியில் அன்னம் தயாரித்து சமர்ப்பிக்கப்பட்டு பவுர்ணமி வழிபாடு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் படைக்கப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து மணிகண்டன் தலைமையில் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி