உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / அண்ணாதுரை பிறந்த நாள்

அண்ணாதுரை பிறந்த நாள்

விருதுநகர்: விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலைக்கு தி.மு.க., சார்பில் அமைச்சர்கள் சாத்துார் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மரியாதை செலுத்தினர். எம்.எல்.ஏ., சீனிவாசன், நகராட்சி தலைவர் மாதவன், உள்பட பலர் பங்கேற்றனர். சிவகாசியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்துாரில் தி.மு.க. சார்பில் நகர செயலாளர் அய்யாவுபாண்டியன் தலைமையில் நகராட்சி தலைவர் ரவிக்கண்ணன், துணைத் தலைவர் செல்வமணி, முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஆறுமுகம், அ.தி.மு.க. சார்பில் எம்.எல்.ஏ. மான்ராஜ் தலைமையில் ஒன்றிய செயலாளர் குறிஞ்சி முருகன், நகர செயலாளர் காமராஜ், கட்சி நிர்வாகிகளும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அருப்புக்கோட்டையில் தி.மு.க., சார்பில் முன்னாள் நகராட்சி தலைவர் சிவபிரகாசம் மாலை அணிவித்தார். நகராட்சி துணை தலைவர் பழனிச்சாமி, நகர செயலாளர் மணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை