உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேகம்

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் நாடக சாலை தெரு திருவேங்கடமுடையான் கோயிலில் நேற்று முதல் வருடாபிஷேக விழா துவங்கியது.நேற்று காலை ஸ்ரீ தேவி பூமாதேவி, திருவேங்கடமுடையானுக்கு கோயில் பட்டர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் மாக்காப்பு அலங்காரம் சாற்றப்பட்டது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (ஜன. 28) சந்தன காப்பு அலங்காரமும், நாளை (ஜன. 29) காலையில் 108 கலச திருமஞ்சனமும், மாலையில் கருட சேவையும், ஜன 30 அன்று ஏக தின லட்சார்ச்சனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கார் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை