உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

வத்திராயிருப்பு: கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் நடந்த கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற வத்திராயிருப்பு ரங்காராவ் லயன்ஸ் பெண்கள் மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் ஆசிரியர் தின விழா நடந்தது. பள்ளி தலைவர் சுந்தரராஜ பெருமாள் தலைமை வகித்தார். தாளாளர் விஜயகுமார், பொருளாளர் டாக்டர் பால்சாமி முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி டாக்டர் ஜெயராமன், ஆசிரியர் தின சிறப்புகள் குறித்து அரிமா சங்க தலைவர் முத்துவேல் பேசினர். விழாவில் பள்ளி நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முதல்வர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை