ஆராய்ச்சிக்கு ஒப்புதல்
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரியின் பேராசிரியர்கள் குழுவிற்கு இஸ்ரோ, விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சார்பில் ரூ.17.85 லட்சம் ஆராய்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பேராசிரியர்கள் ஸ்ரீபாலா, காந்தி, பாலவைரவன், பாஸ்கரன், கல்லுாரி முதல்வர் செந்தில் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். இவர்களை கல்லுாரி செயலாளர் மகேஷ்குமார், தலைவர் முரளிதரன், உபதலைவர் தனபால், பொருளாளர் தியாகராஜன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பாராட்டினர்.