உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / மூவரைவென்றானில் தொல்லியல் ஆய்வு

மூவரைவென்றானில் தொல்லியல் ஆய்வு

வத்திராயிருப்பு:விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா மூவரை வென்றான் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் மலை அடிவாரத்தில் குளம் தோண்டிய போது மண் பானை ஓடுகள் கிடைத்த இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த இக்கோயில் அடிவாரத்தில் மூவரை வென்றான் ஊராட்சி சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் குளம் தோண்டும் பணி நடந்தது. அப்போது மண்பானை ஓடுகள், எலும்புகள் தென்பட்டன. வத்திராயிருப்பு வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி கலெக்டருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அங்கு தொல்லியல் அலுவலர் சண்முகவள்ளி தலைமையிலான அலுவலர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர். பின் அங்கு கிடைத்த மண் குடுவை, மண்பானை, இரும்பு பொருட்களை வருவாய்த்துறையினர் அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ