மேலும் செய்திகள்
போக்சோ கைதி மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
30-Jun-2025
விருதுநகர்: சாத்துார் சடையம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் காளிமுத்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதற்காக இவர் மீது சாத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடாமல் தடுக்க அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் எஸ்.பி., கண்ணன் பரிந்துரைத்தார். கலெக்டர் சுகபுத்ரா உத்தரவில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
30-Jun-2025