உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருட்டு முயற்சி

ஸ்ரீவி., அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் திருட்டு முயற்சி

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அரசு மருத்துவமனையில் இரவில் புகுந்து சிகிச்சை பெறும் உள் நோயாளிகளிடம் திருட முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர். நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த மருத்துவமனையில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினமும் சிகிச்சை பெற வருகின்றனர். மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் வார்டிலும் பலர் உள் நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 2:00 மணிக்கு மேல் பெண்கள் வார்டில் புகுந்த மர்ம நபர் தூங்கிக் கொண்டிருந்தவர்களிடம் நகை, பணம், அலைபேசிகளை திருட முயன்றுள்ளார். சிகிச்சை பெறுவோர் விழித்ததால் அவர் தப்பி ஓடியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி