உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

ஆட்டோ டிரைவர்கள் போராட்டம்

காரியாபட்டி : காரியாபட்டி முக்கு ரோட்டில் மினி பஸ்சை மறித்து ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். காரியாபட்டி முக்கு ரோட்டில் இருந்து தோப்பூர் வழியாக சத்திர புளியங்குளம், எஸ்.தோப்பூர் வழியாக வெற்றிலை முருகன்பட்டி வரை சில மாதங்களாக மினி பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அதே பகுதியில் எஸ்.தோப்பூர், சித்து மூன்றடைப்பு வரை ஆட்டோ அதிக அளவில் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் மினி பஸ் இயக்குவதால் ஆட்டோவுக்கு பயணிகள் வருவதில்லை, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, நேற்று காலை ஆட்டோ டிரைவர்கள் மினி பஸ்சை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் மினி பஸ் இயக்கும் நேரங்களில் ஆட்டோ இயக்கக் கூடாது. மற்ற நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !