உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு முகாம்

விழிப்புணர்வு முகாம்

சாத்துார்: வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது.இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் தலைமை வகித்தார்.சப் இன்ஸ்பெக்டர்கள் ஹரிராம், பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். இரவு நேரத்தில் பட்டாசு தயாரிக்க கூடாது .பட்டாசு ஆலை விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். சிவகாசி தொழிலக பாதுகாப்பு துறையின் அனுமதி இல்லாமல் ஞாயிற்றுக்கிழமையில் பட்டாசு தயாரிக்க கூடாது.மூடி கிடக்கும் பட்டாசு ஆலைகளில் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடப்பதால் ஆலைகளில் கண்காணிப்பு கேமாராக்கள் பொருத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர். ஏழாயிரம் பண்ணை வெம்பக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ