UPDATED : செப் 08, 2026 03:37 PM | ADDED : செப் 08, 2026 03:31 PM
திருச்சுழி:திருச்சுழி அருகே பரளச்சியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது. தேசிய இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் நடந்த முகாமில் தோட்டக்கலை உதவி இயக்குனர் கண்ணன் வரவேற்றார். வேளாண் அறிவியல் நிலையத்தின் பேராசிரியர் கிருஷ்ணகுமார் இயற்கை வேளாண்மை முக்கியத்துவம், இயற்கை இடு பொருட்களின் பயன்பாடு, மண்வாள பாதுகாப்பு, சுற்றுச்சூழல், பாதுகாப்பான உணவு உற்பத்தி குறித்து விளக்கினார். திருச்சுழி சுற்றியுள்ள விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உதவி தோட்டக்கலை அலுவலர்கள் முத்துமங்காள், கலைவாணி செய்தனர். ___