மேலும் செய்திகள்
தேர்தல் விழிப்புணர்வு ஊர்வலம்
26-Mar-2026
அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை சௌடாம்பிகா கல்வி குழுமம் சார்பாக வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. மக்களிடம் ஓட்டு போடுவதை அவசியம், ஜனநாயக பொறுப்பை உணர்த்தும் நோக்கில் நடந்த ஊர்வலத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் மாரிமுத்து துவக்கி வைத்தார். சௌடாம்பிகா இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கண்ணன், தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் முருகேசன், பள்ளி நிர்வாகிகள் பாஸ்கரராஜன், வெள்ளைச்சாமி, கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டனர். நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் நடந்தது. சௌடாம்பிகா கல்வி குழுமத்தின் இன்ஜினியரிங் கல்லூரி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் கல்லூரி, கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி, நர்சரி பள்ளி, பாலிடெக்னிக் கல்லூரி உள்ளிட்டவைகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். ____
26-Mar-2026