உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கூட்டம்

விழிப்புணர்வு கூட்டம்

ராஜபாளையம்:ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷனில் பொதினி அறக்கட்டளை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை குறித்து பயணிகளுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அறக்கட்டளை தலைவர் பெருமாள் வரவேற்றார். ரயில் பயனாளர் சங்க தலைவர் சுகந்தம் ராமகிருஷ்ணன், நிலைய அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை ராமதிலகம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் காளி பங்கேற்று பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய தீமைகளை நோட்டீஸ் வழங்கி விளக்கினர். விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தப்பட்டது. நிர்வாக இயக்குனர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி