உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் தலைமை மருத்துவமனை, லயன்ஸ் கிளப், ரோட்டரி கிளப், ரத்தினம் நர்சிங் கல்லூரி இணைந்து தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதில் நர்சிங் கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர். தலைமை மருத்துவர்கள் இளங்கோ, ஜெகமணி துவக்கி வைத்தனர். அரசு மருத்துவமனையில் இருந்து ஊர்வலம் எம்.எஸ்., கார்னர் வரை சென்றது. சுற்றுச் சூழல் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்களை மாணவிகள் எழுப்பினர்.ஊர்வலத்தில் லயன்ஸ் கிளப் தலைவர் கிருபா ராஜ்குமார், ரோட்டரி தலைவர் கனகராஜ், செயலர் ஓம்ராஜ், பொருளாளர் முத்துவேல், தலைமை செவிலியர்கள், மருந்தாளுநர் மணி சங்கர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை