உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விழிப்புணர்வு கருத்தரங்கம்

விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிவகாசி: சிவகாசியில் மத்திய புள்ளியியல் துறை சார்பில் தேசிய மாதிரி ஆய்வின் ஆண்டு விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது. நாடு முழுவதும் மக்களின் சமூக, பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட அனைத்து தரவுகளை சேகரிக்கும் வகையில் 1950 ல் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. இதன் 75 வது ஆண்டு விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாவட்ட புள்ளியியல் அலுவலகம் சார்பில் சிவகாசி அடுக்குமாடி குடியிருப்பில் தேசிய புள்ளியியல் துறையில் விழிப்புணர்வு கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது. விருதுநகர் புள்ளியியல் அலுவலக உதவி இயக்குநர் ரத்தினம் தலைமை வகித்தார். முதுநிலை புள்ளியியல் அலுவலர் அஜித் வரவேற்றார். முதுநிலை புள்ளியல் அலுவலர் சேதுமகேஸ்வரன், சிவகாசி அய்யநாடார் கல்லுாரி பொருளாதார பேராசிரியர் காளிராஜன் பேசினர். கள அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ