உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு

காரியாபட்டி: காரியாபட்டி சேது பொறியியல் கல்லுாரியில் குழந்தைகள் பாதுகாப்பு, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிறுவனர் முகமது ஜலீல் தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் காப்பாளர் மீனாட்சி, குழந்தை திருமணம், துன்புறுத்துதல் குறித்தும், உளவியல் ஆலோசகர் கங்கா விஜயராகவன் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பேசினர். ஏற்பாடுகளை கல்லுாரி ஐ.எஸ்.டி.இ., கழகம், பயோடெக் பொறியியல் துறை தேசிய சேவை திட்டக் கழகம் செய்தனர். ரோட்ராக்ட் கழகம் சார்பில் மாணவர்களுக்கு, ஆசிரியர்களுக்கு வாசன் ஐ கேர் மருத்துவமனை டாக்டர்கள் கண் பரிசோதனை செய்தனர். இதையடுத்து சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி ஏ.டி.எஸ்.பி., ராமலிங்கம் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்