ஆவணங்கள் இல்லாத விதைகளுக்கு தடை
விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்துார், ராஜபாளையம் பகுதிகளில் அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களில் விதை விற்பனை உரிமம், விதை இருப்பு பதிவேடு, விற்பனை பட்டியல், கொள்முதல் பட்டியல், அரசால் வழங்கப்படும் பதிவுச் சான்று, விதை முளைப்புத் திறன் சான்று, விதை இருப்பு பட்டியல், விதை இருப்பு கோடவுனில் விதை ஆய்வு துணை இயக்குனர் வளர்மதி ஆய்வு செய்தார்.இந்த ஆய்வில் விதை முளைப்புத் திறன் சான்று இல்லாத ரூ. 1 லட்சத்து 10 ஆயிரத்து 400 மதிப்பிலான விதைகளுக்கு விற்பனை தடை விதித்தார். விதை மூட்டைகள் நல்ல காற்றோட்டமாகவும், உரம், மருந்துகளின் அருகில் இல்லாதவாறும் சேமிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.விதைச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றாத விதை விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்தார். இதில் விதை ஆய்வாளர்கள் ஸ்டீபன் ராஜாசிங், அபர்ணா, மாணிக்கராஜ், பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.