பந்தல்குடியில் சூறாவளிக்கு சாய்ந்த வாழை மரங்கள்
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பந்தல்குடி அருகே வீசிய சூறாவளியில் வாழை மரங்கள் சாய்ந்தன. அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி, சிதம்பராபுரம், சின்ன செட்டிகுறிச்சி, ராமநாயக்கன்பட்டி, வாழ்வாங்கி, செட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் வாழை பயிரிட்டுள்ளனர். ஆயிரம் ஏக்கரில் வாழை விவசாயம் நடக்கிறது. நேற்று முன்தினம் மாலை அடித்த வீசிய பலத்த சூறாவளியில் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பலன் தர சில நாட்களே உள்ள நிலையில் மரங்கள் அடியோடு சாய்ந்ததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள்: ஏக்கருக்கு ஒரு லட்சம் செலவழித்து அறுவடைக்கு காத்திருந்த நிலையில் பலத்த காற்றால் வாழைமரம் சாய்ந்து விட்டது. 400 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் சாய்ந்து உள்ளன. மாவட்ட நிர்வாகம் கணக்கெடுப்பு நடத்தி எங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என, கோரிக்கையை வைத்துள்ளனர்.