மேலும் செய்திகள்
காட்சிப்பொருளான குளியல் தொட்டி
26-Jul-2025
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது ஆத்திப்பட்டி ஊராட்சி. ஊராட்சி அலுவலகத்திற்கு அருகில் மக்களின் பயன்பாட்டிற்காக பல லட்சம் செலவில் குளியல் தொட்டி கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராமலேயே பராமரிப்பு இன்றி சேதமடைந்து விட்டது. தண்ணீர் வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இங்கு வந்து அமர்ந்து குடித்துவிட்டு காலியான மது பாட்டில்களை குளியல் தொட்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். ஜனவரி 2025 ல், ஊராட்சி தலைவர் பதவி முடிந்தவுடன், ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் முறையாக நடக்கவில்லை. பராமரிப்பு இல்லாத குளியல் தொட்டியை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. 3.50 லட்சம் நிதியில் கட்டப்பட்ட கழிப்பறையும் மக்களின் பயன்பாட்டிற்கு வரவில்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வளர்ச்சி பணிகளை முறையாக ஆய்வு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
26-Jul-2025