கட்டையால் அடித்துக்கொலை
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை அருகே தொட்டியாங் குளத்தை சேர்ந்தவர் முனியாண்டி, 45, இவர் நேற்று அதிகாலை 2:30 மணிக்கு குடிபோதையில் தனியார் கல்லூரி ரோடு வழியாக ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கல்லூரிக்கு எதிரே இருந்த மரக்கடையில் குடி போதையில் வி.வி.ஆர்., காலனியை சேர்ந்த அருண், 24, நின்று கொண்டிருந்தார். அந்த வழியாக வந்து கொண்டிருந்த முனியாண்டியை வம்புக்கு இழுத்து உள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. இதில், அருண் மரக்கடையில் இருந்த கட்டையால் முனியாண்டியை அடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார்.அருப்புக்கோட்டை டவுன் போலீசார் அருணை கைது செய்துவிசாரிக்கின்றனர்.