மேலும் செய்திகள்
நிர்வாகிகள் தேர்வு
06-Jan-2025
விருதுநகர்: விருதுநகர் கிழக்கு மாவட்டத்தில் பா,ஜ,,நகர ஒன்றிய புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். விருதுநகர் கிழக்கு மாவட்டம் விருதுநகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகளை மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் தேர்தல் அதிகாரி முன்னாள் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் அறிவித்தார். நகர தலைவராக மணிராஜன், வடக்கு ஒன்றிய தலைவராக முனியசாமி, தெற்கு ஒன்றிய தலைவராக கோபி, மேற்கு ஒன்றிய தலைவராக ஜெயா, சிவகாசி கிழக்கு ஒன்றிய தலைவராக பாலமுருகன் நியமிக்கப்பட்டனர். இதில் விருதுநகர் சட்டசபை பிரபாரி சங்கரேஸ்வரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், பிரசார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி பங்கேற்றனர்.
06-Jan-2025