உள்ளூர் செய்திகள்

 பா.ஜ., மனு

விருதுநகர்: விருதுநகரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட துணைத் தலைவர் பார்த்தசாரதி, ஆளுநர் ரவியிடம் அளித்த மனு: விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளது. 1972 வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் வனவிலங்கு பட்டியலில் 3ம் இடத்தில் உள்ள காட்டுப் பன்றியை வனவிலங்குகளில் இருந்து எடுத்து வீட்டு விலங்குகள் பட்டியலில் 5ம்இடமாக சேர்க்க வேண்டும். இதன் மூலம் காட்டுப்பன்றியை வேட்டையாட முடிவதுடன் விவசாயத்திலும் பாதிப்பு குறையும், என தெரிவித்துள்ளார். மாநில செயலாளர் ஊடகப்பிரிவு செல்வகுமார் உடனிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !