பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கும் எடை தராசிற்கும் புளுடூத் இணைப்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கும், எடை தராசிற்கும் கொடுக்கப்பட்ட புளுடூத் இணைப்பால் பொருட்கள்வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள், மக்கள் புலம்புகின்றனர்.விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 961 ரேஷன் கடைகள் மூலம் மக்களின் அத்தியாவசிய பொருள் தேவைகளை வினியோகிக்க செயல்பட்டு வருகிறது. பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கும் எடை தராசிற்கும் புளுடூத் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.இதனால் ரேஷன் கடைகளில் விற்பனையாளர்களுக்கும், மக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. மேலும் சர்வர் பிரச்னை காரணமாக வினியோகம் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. நாள் ஒன்றுக்கு 40 கார்டுகளில் இருந்து 60 கார்டுகள் மட்டுமே வினியோகிக்க முடிகிறது என விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். இது குறித்து கூட்டுறவுநியாய விலைக்கடை பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கன்வீனர் முனியாண்டி கூறியதாவது: பி.ஓ.எஸ்., இயந்திரத்திற்கும், எடை தராசிற்கும்புளுடூத் இணைப்பு கொடுத்துள்ளதை இணைப்பை துண்டிக்க கோரியும், அத்தியாவசிய பொருட்களை பொட்டலமிட்டு வழங்க வலியுறுத்தியும் ஜூலை 1 காலை 11:00 மணிக்கு கலெக்டரிடம் பி.ஓ.எஸ்., இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம் செய்வோம், என்றனர்.